| 611 | “மாதினை ஓர் கூறு உகந்தாய்! மறை கொள் நாவா!             மதிசூடீ! வானவர்கள் தங்கட்கு எல்லாம்   நாதனே!” என்று என்று பரவி, நாளும் நைந்து             உருகி, வஞ்சகம் அற்று, அன்பு கூர்ந்து,   வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு,                  வைகல் மறவாது, வாழ்த்தி, ஏத்தி,   காதன்மையால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே            கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!. |