Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை,
          கன வயிரக் குன்று அனைய காட்சியானை,
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை,
        அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை,
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
  சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை, -
              பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.