115 | கை எலாம் நெய் பாய, கழுத்தே கிட்ட, கால் நிமிர்த்து, நின்று உண்ணும் கையர் சொன்ன பொய் எலாம் மெய் என்று கருதிப் புக்குப் புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்; செய் எலாம் செழுங் கமலப் பழன வேலித் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை, -நீதனேன் என்னே நான் நினையா ஆறே!. |