160கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணிபோலும்;
      கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும்;
பாரார் பரவப்படுவார் போலும்; பத்துப்பல்
                          ஊழி பரந்தார் போலும்;
சீரால் வணங்கப்படுவார் போலும்; திசைஅனைத்தும்
                   ஆய், மற்றும் ஆனார் போலும்;
ஏர் ஆர் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
                              மேவிய ஈசனாரே!.