293 | முந்திய வல்வினைகள் தீர்ப்பான்தன்னை, மூவாத மேனி முக்கண்ணினானை, சந்திரனும் வெங்கதிரும் ஆயினானை, சங்கரனை, சங்கக் குழையான்தன்னை, மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்தன்னை, மறுமையும் இம்மையும் ஆனான்தன்னை, அம் திரனை, ஆரூரில் அம்மான்தன்னை, -அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |