Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.31 திருஆரூர்
திருத்தாண்டகம்
310இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
   வா! “ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய்!” என்றும்,
“சுடர் ஒளியாய்! உள் விளங்கு சோதீ!” என்றும்,
          “தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா!” என்றும்,
“கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா!”
      என்றும், “கலைமான் மறி ஏந்து கையா!” என்றும்,
“அடல் விடையாய்! ஆரமுதே! ஆதீ!” என்றும்,
           “ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.