| 34 | ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள்                      தொழுது ஏத்த இருக்கின்றானே;   பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம்                         தடமார்பில் பயில்வித்தானே;   நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல்                        ஒற்றைக்கண் நிறைவித்தானே;   ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன்                     ஆகில் அதிகைவீரட்டன் ஆமே. |