| 493 | சென்று அச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண்; தியம்பகன்                             காண்; திரி புரங்கள் மூன்றும்   பொன்றப் பொடி ஆக நோக்கினான் காண்; பூதன் காண்;                                   பூதப்படையாளீ காண்;   அன்று அப் பொழுதே அருள் செய்தான் காண்; அனல் ஆடி                 காண்; அடியார்க்கு அமுது ஆனான் காண்;   மன்றல்-மணம் கமழும் வார்சடையான் காண் மா கடல் சூழ்                               கோகரணம் மன்னினானே. |