50 | மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி! மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி! விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி! வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி! பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி! பார் முழுதும் ஆய பரமா, போற்றி! கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!- கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!. |