500 | சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலை ஓடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை, பவம் தாங்கு பாசு பத வேடத்தானை, பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் கவர்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழச் சிவந்தானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே. |