| 512 | வெண்காட்டார்; செங்காட்டங்குடியார்; வெண்ணி நன்நகரார்;                          வேட்களத்தார்; வேதம் நாவார்;   பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார்;         பராய்த்துறையார்; சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர்   வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்து,                      உரிவை போர்த்த விடலை வேடம்   விண் காட்டும் பிறை நுதலி அஞ்சக் காட்டி,                            வீழிமிழலையே மேவினாரே. |