542 | சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை, சிவன் தன்னை, தேவ தேவை, கூர்த்தானை, கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் பேர்த்தானை, பிறப்பு இலியை, இறப்பு ஒன்று இல்லாப் பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப் போர்த்தானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. |