Try error :java.sql.SQLException: Closed Resultset: next
594சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும், தக்கன்
             தன் பெருவேள்வி தகர்த்திட்டாரும்,
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண்
       பலிக்கு என்று ஊர் ஊரின் உழிதர்வாரும்,
மடை ஏறிக் கயல் பாய வயல்கள் சூழ்ந்த
         மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்,
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும்
   வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.