Try error :java.sql.SQLException: Closed Resultset: next
641பரந்தவன் காண், பல் உயிர்கள் ஆகி எங்கும்;
     பணிந்து எழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன் காண்; தூ மலர் அம் கண்ணியான் காண்;
      தோற்றம், நிலை, இறுதி, பொருள் ஆய் வந்த
மருந்து அவன் காண்; வையகங்கள் பொறை தீர்ப்பான்
   காண்; மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
        ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.