646 | அசைந்தவன் காண், நடம் ஆடிப் பாடல் பேணி; அழல் வண்ணத்தில்(ல்) அடியும் முடியும் தேடப் பசைந்தவன் காண்; பேய்க் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண்; பரவி நினைந்து எழுவார் தம்பால் கசிந்தவன் காண்; கரியின் உரி போர்த்தான் தான் காண்; கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |