648 | வரும் தவன் காண்; மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண்; அஞ்சு எழுத்தும் நினைவார்க்கு என்றும் மருந்து அவன் காண்; வான் பிணிகள் தீரும் வண்ணம்; வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகிப் பரந்தவன் காண்; படர் சடை எட்டு உடையான் தான் காண்; பங்கயத்தோன் தன் சிரத்தை ஏந்தி, ஊர் ஊர் இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |