| 806 | வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்;            மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்;   பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்;              பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்;   செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்;              திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்;   கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய்           கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. |