866 | பார் அவன் காண்; பார் அதனில் பயிர் ஆனான் காண்; பயிர் வளர்க்கும் துளி அவன் காண்; துளியில் நின்ற நீர் அவன் காண்; நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்; நில வேந்தர் பரிசு ஆக நினைவு உற்று ஓங்கும் பேரவன் காண்; பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது, பலநாளும் வழிபட்டு, ஏத்தும் சீரவன் காண்; சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே. |