883 | பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்; பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர் போலும்; வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித் திரியும் தொண்டர் ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |