91 | உருள் உடைய தேர், புரவியோடும், யானை, ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்திவெள் ஏறு; இருள் உடைய கண்டத்தர்;செந்தீவண்ணர்; இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார், தாம்; பொருள் உடையர் அல்லர்;இலரும் அல்லர்; புலித்தோல் உடை ஆகப் பூதம் சூழ, அருள் உடைய அம் கோதை, மாலை மார்பர் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!. |