Try error :java.sql.SQLException: Closed Resultset: next
901பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த
                            பரஞ்சுடரை, பரிந்து தன்னைப்
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை, தேனை,
                  புண்ணியனை, புவனி அது முழுதும் போத
உமிழும் அம் பொன் குன்றத்தை, முத்தின் தூணை, உமையவள்
                      தம் பெருமானை, இமையோர் ஏத்தும்
திகழ் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
                      சென்று அடையப் பெற்றேன், நானே.