925அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் ஆகி, அருமறையோடு
                              ஐம்பூதம் தானே ஆகி,
பங்கம் ஆய், பல சொல்லும் தானே ஆகி, பால் மதியோடு
                          ஆதி ஆய், பான்மை ஆகி,
கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி,
                           மலை ஆகி, கழியும் ஆகி,
எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர்
                      ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.