163 | ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும், பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி, படுவெண் தலையில் பலி கொள்வாரும், மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும், மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும், ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்-இடைமருது மேவிய ஈசனாரே. |