316 | பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில், பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில், சுற்றி நின்ற சூழ் வினைகள் வீழ்க்க வேண்டில், சொல்லுகேன்; கேள்: நெஞ்சே, துஞ்சா வண்ணம்! “உற்றவரும் உறு துணையும் நீயே” என்றும், “உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன்” என்றும், “புற்று அரவக் கச்சு ஆர்த்த புனிதா!” என்றும், “பொழில் ஆரூரா!” என்றே, போற்றா நில்லே!. |