488 | பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகு அளந்த படியானும், பரவிக் காணாது அங்கை வைத்த சென்னியராய், அளக்க மாட்டா அனல் அவன் காண்; அலை கடல் சூழ் இலங்கை வேந்தன் கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண்; அழகன் காண்; கோலம் ஆய மங்கையர்க்கு ஓர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |