346நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ?
             நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக்
கலந்து உரைக்கக் கற்பகம் ஆய் நின்ற நாளோ?
        காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று,
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ,
          வாசுகியை வாய் மடுத்து, வானோர் உய்ய,
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ?
          தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.