618 | திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி, திகையாதே, “சிவாய நம” என்னும் சிந்தைச் சுருதிதனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்-கடல் நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு, “பருதி தனைப் பல் பறித்த பாவநாசா! பரஞ்சுடரே!” என்று என்று பரவி, நாளும் கருதி மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!. |