619 | “குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய்!” என்றும், “கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய்!” என்றும், “தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய்!” என்றும், “தசக்கிரிவன் மலை எடுக்க, விரலால் ஊன்றி, முனிந்து அவன் தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு, அருள் கொடுத்த மூர்த்தி!” என்றும், கனிந்து மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!. |