778நாறு பூங்கொன்றை முடியார் தாமே; நால்மறையோடு
                     ஆறு அங்கம் சொன்னார் தாமே;
மாறு இலா மேனி உடையார் தாமே; மா மதியம்
                     செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே;
                      பழனை பதியா உடையார் தாமே;
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு
                 ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.