314 | இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால்; இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி, “பிழைத்தது எலாம் பொறுத்து அருள் செய் பெரியோய்!” என்றும், “பிஞ்ஞகனே! மைஞ் ஞவிலும் கண்டா!” என்றும், அழைத்து அலறி, “அடியேன் உன் அரணம் கண்டாய், அணி ஆரூர் இடம் கொண்ட அழகா!” என்றும், “குழல் சடை எம் கோன்!” என்றும், கூறு, நெஞ்சே! குற்றம் இல்லை, என்மேல்; நான் கூறினேனே. |