416 | தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும், தலை ஆர் கயிலாயன் நீயே என்றும், எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும், ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும், முந்திய முக்கணாய் நீயே என்றும், மூவலூர் மேவினாய் நீயே என்றும், சிந்தையாய், தேனூராய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே. |