Try error :java.sql.SQLException: Closed Resultset: next
552பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி! பிறவி
                    அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி! மருவி
                 என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
         போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி! கயிலை
                   மலையானே, போற்றி போற்றி!.