916 | தண்டி, குண்டோதரன், பிங்கிருடி, சார்ந்த புகழ் நந்தி, சங்கு கன்னன், பண்டை உலகம் படைத்தான் தானும், பாரை அளந்தான், பல்லாண்டு இசைப்ப; திண்டி வயிற்றுச் சிறு கண் பூதம்-சில பாட; செங்கண் விடை ஒன்று ஊர்வான் “கண்டியூர் கண்டியூர்” என்பீர் ஆகில், கடுக நும் வல்வினையைக் கழற்றல் ஆமே. |