Try error :java.sql.SQLException: Closed Resultset: next
926மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும்
                                        தானே ஆகி,
கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக்
                                       குழகன் ஆகி,
போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு
                              அறுக்கும் புனிதன் ஆகி,
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி, அழல் வண்ண
                            வண்ணர் தாம் நின்ற ஆறே!.