6.97 பொது
திருவினாத் திருத்தாண்டகம்
951அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல் அங்கை
                       ஏந்திய ஆடல் உண்டோ?
பண்டை எழுவர் படியும் உண்டோ? பாரிடங்கள்
                  பல சூழப் போந்தது உண்டோ?
கண்டம் இறையே கறுத்தது உண்டோ? கண்ணின்
            மேல் கண் ஒன்று கண்டது உண்டோ?
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ?
         சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.