291 | பொன்னே போல்-திருமேனி உடையான்தன்னை, பொங்கு வெண்நூலானை, புனிதன்தன்னை, மின்னானை, மின் இடையாள் பாகன்தன்னை, வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான்தன்னை, தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தத்துவனை, உத்தமனை, தழல் போல் மேனி அன்னானை, ஆரூரில் அம்மான்தன்னை- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |