Try error :java.sql.SQLException: Closed Resultset: next
23வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை,
        வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னை,
புள்ளிவரிநாகம் பூண்டான் தன்னை, பொன்
                  பிதிர்ந்தன்ன சடையான் தன்னை,
வள்ளி வளைத் தோள் முதல்வன் தன்னை, வாரா
                  உலகு அருள வல்லான் தன்னை,
எள்க இடு பிச்சை ஏற்பான்தன்னை, - ஏழையேன்
                     நான் பண்டு இகழ்ந்த ஆறே!