43 | நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே; நேர் ஒருவர் இல்லாதானே; கொடி ஏறு கோல மா மணிகண்ட(ன்)னே; கொல் வேங்கை அதளனே; கோவணவனே; பொடி ஏறு மேனியனே; ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே; புரிநூலானே; அடியாரை அமருலகம் ஆள்விக்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே. |