52சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி! சீபர்ப்பதம்
                      சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
           புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி! தத்துவனே,
                  போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!-அலை
          கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.