566 | மை சேர்ந்த கண்டம் உடையாய், போற்றி! மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய், போற்றி! பொய் சேர்ந்த சிந்தை புகாதாய், போற்றி! போகாது என் உள்ளத்து இருந்தாய், போற்றி! மெய் சேரப் பால்வெண்நீறு ஆடீ, போற்றி! மிக்கார்கள் ஏத்தும் விளக்கே, போற்றி! கை சேர் அனல் ஏந்தி ஆடீ, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |