584 | மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர்; இந் நாள் கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கே போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்ல, புறக்கணித்து, தம்முடைய பூதம் சூழ, “வா வா!” என உரைத்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே. |