650 | அறுத்தான் காண், அயன் சிரத்தை; அமரர் வேண்ட, ஆழ்கடலின் நஞ்சு உண்டு, அங்கு அணி நீர்க்கங்கை செறுத்தான் காண்; தேவர்க்கும் தேவன் தான் காண்; திசை அனைத்தும் தொழுது ஏத்த, கலை மான் கையில் பொறுத்தான் காண்; புகல் இடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்தன் முடி, தோள்நால்-அஞ்சு, இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |