305 | சங்கரன்காண்; சக்கரம் மாற்கு அருள் செய்தான்காண்; தருணேந்து சேகரன்காண்; தலைவன் தான்காண்; அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன்காண்; அணி பொழில் சூழ் ஐயாற்றான்காண்; எங்கள் பெருமான்காண்; என் இடர்கள் போக அருள் செய்யும் இறைவன்காண்- இமையோர் ஏத்தும் செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |