873 | பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்பப் பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை; பாங்கு இலா நரகு அதனில்-தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை; ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர், உயர் புகழ் அந்தணர் ஏத்த, உலகர்க்கு என்றும் தீங்கு இல், திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!. |