Try error :java.sql.SQLException: Closed Resultset: next
912பொய் ஆறா ஆறே புனைந்து பேசி, புலர்ந்து எழுந்த
                              காலைப் பொருளே தேடி,
“கையாறாக் கரணம் உடையோம்” என்று களித்த
                            மனத்தராய், கருதி வாழ்வீர்!
நெய் ஆறா ஆடிய நீலகண்டர், நிமிர் புன்சடை
                                நெற்றிக்கண்ணர், மேய
“ஐயாறே ஐயாறே” என்பீர் ஆகில், அல்லல் தீர்ந்து
                            அமருலகம் ஆளல் ஆமே.