188ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று, தன் 
       முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று,
       பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்;
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும் குழற்கு
      அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;
ங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்-
   பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.