510 | பூதி அணி பொன்நிறத்தர்; பூணநூலர்; பொங்கு அரவர்; சங்கரர்; வெண்குழை ஓர் காதர்; கேதிசரம் மேவினார்; கேதாரத்தார்; கெடில வட அதிகை வீரட்டத்தார்; மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார்; மழபாடி மேய மணவாள(ன்)னார்; வேதி குடி உளார்; மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே. |