446எறிந்தானே! எண் திசைக்கும் கண் ஆனானே! ஏழ்
            உலகம் எல்லாம் முன் ஆய் நின்றானே!
அறிந்தார் தாம் ஓர் இருவர் அறியா வண்ணம்
                 ஆதியும் அந்தமும் ஆகி அங்கே
பிறிந்தானே! “பிறர் ஒருவர் அறியா வண்ணம்
    பெம்மான்!” என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில்
செறிந்தானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்
             ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.