325 | சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி! சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி! பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி! புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி! அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி! செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. |