862 | நக்கன் காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த நாதன் காண்; பூதகணம் ஆட ஆடும் சொக்கன் காண்; கொக்கு இறகு சூடினான் காண்; துடி இடையாள் துணை முலைக்குச் சேர்வு அது ஆகும் பொக்கன் காண்; பொக்கணத்த வெண்நீற்றான் காண்; புவனங்கள் மூன்றினுக்கும் பொருள் ஆய் நின்ற திக்கன் காண்; செக்கர் அது திகழும் மேனிச் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே. |